திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ட்ரோன் தொடர்பில் வெளியாகிய தகவல்
திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை தளபதியிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த அறிக்கை, ட்ரோனின் தொடர்பான பாதுகாப்பு கரிசனைகளை தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் குழு
2024 டிசம்பர் 27 அன்று கடற்றொழிலாளர் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், ஒரு இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ட்ரோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது என்பதை அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் குறித்த ட்ரோன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கையின் விமானப்படை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
