அரச ஊழியர் ஒரு தரப்பினரின் சம்பள விவகாரம் - நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆசிரியர்களின் சம்பளம் முறையாகவும் சரியான நேரத்திலும் வழங்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறியதாவது,
மாணவர்களின் நலன்புரித்திட்டங்கள்
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. இந்த மாதம் ஆசிரியர்களின் சம்பளம் வழங்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கூறியவை பொய்யான தகவல் என்றும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விவரங்களைப் பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றியுள்ளார்.
அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening