அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ananda Wijepala
By Mayuri Aug 20, 2026 10:05 AM GMT
Report

அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.08.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

போலியான தகவல்

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி - பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது. இந்த போலி செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் 7 வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம் | Training Camp Issue In Palai Anadha Wijepala

தம்மை மருத்துவராக அடையாளப்படுத்தி கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

திட்டமிட்ட செயல்

குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை. இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம் | Training Camp Issue In Palai Anadha Wijepala

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US