நீதவான் நீதிமன்றம் ஒன்றில் மாயமாகிய முக்கிய வழக்கு ஆவணங்கள்
பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் நீதிமன்ற வழக்கு ஆவண அறையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சான்றுப் பொருட்கள்
பிபிலை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, நகைகள், பணம், ஆயுதங்களின் பாகங்கள் மற்றும் சிம் அட்டைகள் உள்ளிட்ட முக்கிய சான்றுப் பொருட்களே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றப் பதிவாளர் தயரத்ன பத்தேவிதான, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன பொருட்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 50 வழக்குகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொனராகலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri