யாழ்.வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்
மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகை தரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்பு வேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு...
இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |