பாடசாலையில் மாணவியை தவறான முறைக்குட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிபருக்கு பிணை
மேற்படி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும், அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.

பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று மொரட்டுவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri