ஆசிரியர் போட்டி பரீட்சையில் அநீதி! வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது இன்றைய தினம் (25.06.2026) யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.
பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு
மேலும், வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான தீர்வுகள் கிடைக்க பெறாவிடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என அவர்கள் இதன் போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



பகிரப்பட்ட மாகாண - உள்ளூராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது - தவிசாளர் நிரோஷ்