கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணைகளில் வெளியான தகவல்
மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
காதல் முறிந்ததால் மனமுடைந்த காதலன், பாடசாலை ஆசிரியையான காதலியின் கழுத்தை அறுத்து நேற்று (14.06.2023) மதியம் கொலை செய்துள்ளார்.
சித்தாரா மதுமாலி என்ற 26 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் பலா மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் 1.45 மணியளவில் பாடசாலை முடிந்ததும், பாடசாலை அருகே உள்ள வீட்டிற்கு ஆசிரியர் நடந்து சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை

இந்த நிலையில் வெறிச்சோடிய பகுதியில் துரத்திச் சென்ற காதலன் கத்தியால் குத்தி பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை ஆசிரியை பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே குறித்த இளைஞனுடன் பழகியதாகவும் அந்த இளைஞன் அவரது கல்விக்கான பணத்தை உட்பட செலுத்தியுள்ளார்.
சுமார் பத்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனை அவரது காதலி சில நாட்களாக தவிர்க்க ஆரம்பித்ததில் இருந்து இருவருக்கும் இடையில் சில மனக்கசப்புகள் மற்றும் சண்டைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri