எரிபொருள் விலையை 170 ரூபா வரை குறைக்க முன்வைக்கப்பட்ட யோசனை
பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கினால் ஒவ்வொரு லீற்றரையும் 170 -190 ரூபாவிற்கு சந்தையில் விநியோகிக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் மேடைகளில் கூறியது போன்று எரிபொருள் வரியை நீக்கி மக்களுக்கு வரியின்றி எரிபொருளை வழங்குவதை காண காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரியை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அதனை ஒரே ஒரு வர்த்தமானி மூலம் செய்ய முடியும் எனவும் சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டணம்
மேலும், மின்சாரக் கட்டணத்தையும் முப்பது வீதத்தால் குறைக்கப்படும் என தேர்தல் மேடையில் அப்போது கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஐந்து வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் மக்களை போலி வாக்குறுதிகளால் முற்றாக ஏமாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
