புதிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மறுதினம் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
உழைக்கும் போது செலுத்தும் வரித் தொகை அதிகரிக்கப்பட்டால் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும் என மருத்துவர்கள், வங்கியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தேச புதிய வருமான வரிக் கொள்கை ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் புதிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மறுதினமே தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என சில தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வரி விதிப்பு
நாட்டின் நலனுக்காக பாடுபடும் தொழில்வாண்மையாளர்கள் மீது இவ்வாறு வரி விதிப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்க ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் எதிர்வரும் 9ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா நிதஹாஸ் சேவக சங்கம் அறிவித்துள்ளது.