இலங்கையில் மற்றுமொரு தரப்பினருக்கு விதிக்கப்படும் வரி - வெளியான அறிவிப்பு
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி விதிக்கப்படாது என்றும், 15% வரி மட்டுமே விதிக்கப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார்.
தனிநபர்களுக்கான கட்டாய கடமை
எனவே டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சேவை ஏற்றுமதியிலிருந்து வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தங்களின் சுய மதிப்பீட்டு வரி அறிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு முறையானது, சாதாரண வரி விகிதங்களை விடக் குறைவான வரித் தொகையைக் கொண்டுள்ளது.
இந்த முறைமையில் வருமானம் ஈட்டும் அனைத்து தனிநபர்களுக்கும் இது கட்டாய கடமையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 16 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri