தமிழர் பகுதியில் இனவாதத்தினை கக்கும் பௌத்த மதத்தினர்: செல்வம் எம்.பி குற்றச்சாட்டு(Video)
பௌத்த மதத்தினர் இன வாதத்தினை கக்குகின்ற வகையில் இன்றும் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(20.09.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கருப்பத்தான்குளம் பகுதியில் கூடுதலாக மக்கள் இன்றைக்கும் தங்கள் காணிகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள்.
அச்சமடைந்துள்ள மக்கள்
ஆனால் அருகில் இருக்கின்ற பெரும்பான்மையின கிராம மக்கள் அதை ஒரு மயான காணியாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மயான காணியை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.

மேலும், அனைத்து இனத்தவர்களும் சரிசமமாக வாழக்கூடிய உரித்துடையவர்கள் என்ற முறையிலே வாழ வேண்டும்.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நொச்சிக்குளம் , புளியங்குளம் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் முதலில் இரண்டு படுகொலைகளும் அதன் பின் மூன்று கொலைகளும் இடம் பெற்றுள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்." தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டியவை
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri