தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (Video)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் (18.09.2023) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவு கூறும் செயற்பாடு, இலங்கை சோசலிச குடியரசின் வர்த்தமானி 1721/2 ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது.
மேலும், நடத்தப்படும்
பேரணியை 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச்
சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில்
குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (20.09.2023) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் தெரிவித்தார். இவ் வழக்கில் எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஷ் முன்னிலையாகி இருந்தார்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
