விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்: இந்திய ஊடகங்கள் தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதியதாக ஊகிக்கப்படும் பத்து வரிகள் கொண்ட கடிதம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் 'ஐ லவ்யூ ஓல். மிஸ் யூ ஓல்' (I love You All, I Miss You All) என்று எழுதப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன், நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும், நானும் தவிப்பேன் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு
| நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |