தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணியை தடை செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை
தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.
அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி செயற்படுவதாக குறிப்பிட்டு இந்த பேரணியை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.09.2023) காலை 9.30 மணியளவில் தோன்றுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
வன்முறையாளர்கள் தாக்குதல்
கடந்த (17.09.2023) ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியை மறித்து சில வன்முறையாளர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிமிருந்து கடும் கண்டனங்களுக்குள்ளாகியது. இந்த சம்பவத்தின் பின்னணியிலே தற்போது பொலிஸாரால் தடை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் கொழும்பில் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
