உலக சந்தையில் மீண்டும் சரிந்து பதற்றத்தை ஏற்படுத்திய தங்கவிலை! இலங்கையிலும் திடீர் மாற்றம்
உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென சரிந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,500 ஐத் தாண்டியிருந்த நிலையில், இன்றைய (31) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
இது நேற்று (30) உடன் ஒப்பிடும்போது 434.45 அமெரிக்க டொலர்கள் குறைந்து 8.15% சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை விலையும் 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 29.16 அமெரிக்க டொலர்கள் குறைந்து 25.46% சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, கடந்த 48 மணி நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வணிக செய்தி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கை நிலவரம்
உலகளவில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்ததால், உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதன்படி, இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.380,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.349,600 ஆகவும் விற்பனையாகின்றது.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam