தோட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன்: நடவடிக்கை எடுக்குமாறு மனோ எம்.பி. வலியுறுத்து
ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் இளைஞரை கொச்சைத் தமிழில் திட்டி இரண்டு தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை நீ கும்பிடுவது, சிலையின் தலையா, காலையா, உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என கூறி தோட்ட அதிகாரிகள் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிக்குமார் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலதிக நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இது பற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிஸிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, நிலையப் பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்.அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
கமலநாதனைத் தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி தங்கியுள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
