தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலை : கடலுக்கு செல்வதை நிறுத்திய சிறு தொழிலாளிகள்
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான கடற்றொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான கடற்றொழில் படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்தி
சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழிலில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.

இதனால் அதிகளவான கடற்றொழிலாளர்களின் படகுகள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் தமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்தி தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam