இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தமிழ் வீராங்கனை
இலங்கை வலைப்பந்து (SL - Netball) அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார்.
இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அணி நிர்வாகம்
அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலப்பந்தாட்டப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்றார்.
இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி, இலங்கை அணியிலிருந்து நழுவியது துரதிர்ஸ்டவசமானது, இந்த பின்னடைவுக்கு அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு உள்நாட்டு அளவில் போதுமான அனுபவம் இருந்த போதிலும், வெளிநாட்டுக்களங்களில் வீராங்கனைகளுக்கு உரிய அனுபவம் இல்லை என்றும் தர்ஜினி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் முன்கூட்டியே போதுமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், அந்த அணிக்கு சர்வதேச அனுபவமும் உள்ளது என்று தர்ஜினி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
