இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை! ஆறு தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ஜெனிவாவுக்கு கடிதம்

United Nations Sri Lankan Tamils Geneva Sri Lanka OHCHR
By Rakesh Sep 24, 2022 09:21 PM GMT
Report

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையின் நகல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து இலங்கை விடயத்தைக் கையாளும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராஜா(இலங்கைத் தமிழரசுக் கட்சி), சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தர்த்தன்(புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ந. சிறீகாந்தா (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரே ஒன்றிணைந்து ஒப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை விடயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஐ,நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என மேற்படி ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் ஜெனிவாவிலிருந்து தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை! ஆறு தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ஜெனிவாவுக்கு கடிதம் | Tamil Parties Write Letter Of Displeasure Geneva

தமிழர் தரப்பின் கோரிக்கைகள்

அந்தக் கடிதத்தின் சாராம்சம் வருமாறு,

"பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி வைத்திருந்த போதிலும் வெளிவந்திருக்கும் மாதிரிப் பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைத்ததுமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்ற விடயம் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை! ஆறு தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ஜெனிவாவுக்கு கடிதம் | Tamil Parties Write Letter Of Displeasure Geneva

அழிவுகளுக்கான அனுபவத்தைக் கொண்டவர்கள் நாம். சர்வதேச சமூகத்தின் செயலற்ற நிலையினால் நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

ஐ,நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணை

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை! ஆறு தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ஜெனிவாவுக்கு கடிதம் | Tamil Parties Write Letter Of Displeasure Geneva

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக ஐ,நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணையில் நமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் இருப்பதை அவதானிக்கின்றோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கைகளை மாத்திரமல்லாமல் ஐ.நா. உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளையும் உதாசீனம் செய்து சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்தும் எமது பிரதான கோரிக்கையை உள்ளடக்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US