தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்- இரா. துரைரெட்ணம்
சிங்கள இனவாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் கட்சிகளை கலைத்துவிட்டு வெளியேறி போகலாம் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்றைய தினம்(9) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“புதிய அரசாங்கம் உருவாகி மூன்று மாதம் ஆகிய நிலையில் 2025 ஒரு தேர்தல் ஆண்டாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் செய்த தவறாகும் இது ஜனாதிபதி தேர்தலாகட்டும் உள்ளூராட்சி தேர்தலாகட்டும், மாகாணசபை தேர்தலாக இருக்கலாம்.
இருந்தபோதும் நீதிமன்றம் ஊடாக உள்ளூராட்சி தேர்தல் விரைவாக நடாத்தப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளதுடன் புதிய தேர்தல் ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் சிறுபான்மையாகிய நாங்கள் பல சதாப்தங்களாக பலவற்றை இழந்து எந்த அதிகாரமும் இல்லாமல் நடுத் தெருவில் நிற்கின்ற நிலை தோற்று விக்கப்பட்டுள்ளது.
42 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் உரிமை தொடர்பான இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் அர்ப்பணிக்கப்பட்டு பல வடுக்களை தாங்கி விலைமதிக்க முடியாத இழப்புக்களை சந்தித்தவர்கள்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri