தமிழ் தேசிய தலைமைக்கு அநுரவால் ஒரு போதும் இணையாக முடியாது!
மனித நேயத்தினுடைய உச்சத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் சிறந்த முறையில் கற்றுக் கொடுத்ததாகவும் அநுரவால் ஒரு போதும் அதற்கு இணையாக முடியாது எனவும் கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய அரசாங்கம் மனிதநேயத்தினுடைய உச்சத்தை வெளிப்படுத்த முயல்வதாகவும் ஆனால் இவையெல்லாம் உடனடியாக நடைபெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின்போது அரசாங்கம் மற்றும் அதனுடன் சார்பானவர்கள் சரியான திட்டமிடல் இன்றி பணியாற்றியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கான கொடுப்பனவுகள், நிவாரணப்பொதிகள் வழங்குவது தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இடர் இலங்கை அரசாங்கத்திற்கும், ஆட்சிக்கும் மட்டுமல்ல தமிழர்களிடமும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது எனவும் அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam