பொது வேட்பாளர் விடயம் ஒரு சதி திட்டம்: குற்றம் சுமத்தும் தமிழர் தரப்பு
பூலோக அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனி தமிழர்களை பகடக்காயாக பயன்படுத்த முடியாது எனவும் பொது வேட்பாளர் ஒரு சதி என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Dharmalingam suresh) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள (Batticaloa) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (22.05.2024) மாலை இடம்பெற்று ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டிலே 1949 ஆம் ஆண்டிற்கு பிறகு இருக்கின்ற ஒற்றையாட்சி கட்டமைப்பை அகற்றிவிட்டு ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழர்கள் இந்த தீவிலே நிம்மதியாக வாழவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எமது கோரிக்கையாகும்.
அதன் அடிப்படையில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் கடந்த 75 வருடமாக தமிழ் மக்கள் தொடர்சியாக அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இந்த அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் போராடிவந்து இன்று ஆயுத போராட்டம் பாரிய ஒரு உயிர்சேதங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நிற்கின்ற சூழ்நிலையிலே மீண்டும் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போகின்றோமா?
அல்லது சமஷ்டி கட்டமைப்புக்காக குரல் கொடுக்கப் போகின்றோமா? என்ற விடயத்தை நாங்கள் தெளிவடைய வேண்டும்.
பொது வேட்பாளர் ஒரு நாடகம்
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு இணங்கி அவர்கள் மக்களுக்கு தமிழ் தேசியத்தை கூறிக்கொண்டு மாறாக 2016ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் எல்லாம் ஒரு நாடகம் ஒரு சதி இதற்கு பின்னணியில் இந்தியா நிற்கின்றது.
இந்தியா விரும்புகின்ற நபர்களே அரசியல் தரப்புக்களை காட்டினால் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் அவர்களின் சொல்லை கேட்கமாட்டார்கள் என்பதற்காக இப்படிப்பட்ட சிவில் அமைப்புக்கள் போன்றவற்றை தங்களின் நிகழ்சி நிரலை நிறைவேற்றுவதற்காக இப்படிப்பட்ட சதிகளை இந்தியா செய்கின்றது” என தெரவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |