ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சரத் பொன்சேகா
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (sarath fonseka) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக பத்திரிக்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் பொன்சேகா இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும், மேலும் பல அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவுடன் பொன்சேகா இது குறித்து உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் கலந்துரையாடி விளக்கமளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
