சவுதி அரேபியாவின் முக்கிய பொருளாதார மையம் மீது தாக்குதல்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள, அந்த நாட்டின் அரச முதலீட்டு நிதியமான (PIF) தலைமையகக் கட்டிடம் மீது, நேற்று(19.11.2026) ஹூதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
இந்த தாக்குதலில் கட்டிடத்தின் 7 முதல் 8 மாடிகளில் உள்ள ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.
மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்
கட்டிடத்தின் வெளிப்புற உலோகப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தின் (KAFD) நுழைவாயில்கள் மூடப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

உடனடி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் சவுதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் இலக்காகி வருகின்றன.
சவுதி அதிகாரிகள் இந்த இராணுவ நடவடிக்கை மேலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதையே இந்தத் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.