சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வாகனப் பதிவு எண்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் உள்ள தற்போதைய நிலுவையை 2027 ஓகஸ்ட் மாதத்திற்குள் சரி செய்துவிடுவோம் என மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
காலக்கெடு
கூட்டத்தின் போது, முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை விட காலக்கெடு நீடிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுவதைக் குறிப்பிட்டு, துறை வழங்கிய காலவரம்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடுவாக 2027 ஜூலை அல்லது ஓகஸ்ட் மாதத்தை தாங்கள் முன்பே குறிப்பிட்டிருந்ததாக மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.