அநுரவின் ஆட்சி நகர முடியாமல் தடுக்கும் ஆபத்தானவர்கள் யார்..!
நாட்டிலுள்ள அமைச்சர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள். எதற்கு எடுத்தாலும் ஜனாதிபதியை கூறிக் கொண்டு இருப்பதோடு, நாட்டிலுள்ள மக்கள் இவர்கள்தான் இதற்கான அமைச்சர்கள் என்பதை அறிய 2 ஆண்டுகள் தேவைப்பட்டது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் திருப்பி அனுப்பப்படுகிறது. அமைச்சர்களுக்கு இவ்வாறான நிதியை திட்டமிடுவதில் அனுபவம் இல்லை என்றால் அதற்கான அனுபவம் வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.
இந்நிலையில் ஏன் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் ஒவ்வொரு ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திலும் நிதிப்பற்றாக்குறை இருக்கவே செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! சிறைச்சாலை முன் திரண்ட உறவினர்களால் பதற்றம்