தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் டெல்லி பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டெல்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த விஜயம் அமையவுள்ளது என்று தெரியவருகின்றது.
அரசியல் தீர்வு

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம் என வலியுறுத்தி வரும் கூட்டமைப்பு, இதற்கு முன்னரும் டெல்லி செல்ல முற்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றன. எனினும் அப்பயணம் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே தற்போது டெல்லி செல்வதற்குக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது எனத் தெரியவருகின்றது.
டெல்லிப் பயணத்தின் போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri