தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பு இல்லை! இந்திய புலனாய்வு முயற்சிக்கலாம் (Video)
தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை என வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தனது வயது முதிர்வு உடல்நிலையை கருத்தில் கொண்டு இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய தலைவர் ஒருவரை தேடுவதாக எனக்கு தெரியவில்லை. அப்படி அவர் செய்வதாக இருந்தால் 2020 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே அவர் அதை செய்திருக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரையில் தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை. அப்படியிருக்கையில் அதற்கு அவர் புதிய தலைவரை தேடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சரியோ பிழையோ அவரை விடுத்து மற்ற இரு கட்சிகளும் தாங்கள் தான் தலைவர் என்றும் தாங்கள் தான் கூட்டமைப்பு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்றே கூற வேண்டும். அதற்கு ஒரு தலைவரை சம்பந்தன் தேடினால் அது நகைச்சுவையாக தான் முடியும்.
இது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்பதை பற்றி பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழர்களின் தலைமை என்பதில் நேரடியாக இந்தியாவிற்கு ஒரு கருத்து இருக்கலாம்.
ஆனால் அவ்வாறு ஒருவரை தேடி பிடிக்க கூடிய நிலை இந்தியாவிற்கு இருக்குமா என்பது தெரியாது. அவ்வாறு ஒரு தலைமையை எவ்வாறு தேடி முன் கொண்டுவரலாம் என்பது இந்திய புலனாய்வு ஆய்வுகளுக்கு உட்பட்ட விடயமாகவும் இருக்கலாம்.”என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
