வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.
இனி அவை தேவையில்லை
“ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடான, ஒருவேளை அனைத்திலும் சிறந்ததாக இருந்த ஐக்கிய இராச்சியம், இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.
அது சரி, பிரதமர் ஸ்டார்மர், எங்களுக்கு இனி அவை தேவையில்லை - ஆனால் நாங்கள் நினைவில் கொள்வோம்.
நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்
மத்திய கிழக்கில் நடைபெறும் போரை முன்னெடுக்க அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது என டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போருக்கு ஆதரவு வழங்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam