கொடுத்த வாக்கை மீறிய ஈரான்! துபாயில் ஏவுகணை தாக்குதல் - வெளியான காணொளி
துபாய் மரினா பகுதியில் நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணை தாக்குதல் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை, மெரினாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை குறிவைத்ததாகக் கூறியது.
இடைநீக்கப்பட்ட ஈரானிய ஏவுகணையின் இடிபாடுகள் துபாய் மரினா பகுதியில் உள்ள ஒரு கோபுரத்தை தாக்கியதால் அதன் முன்புறத்தில் புகை எழுந்த காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
துபாயில் தாக்குதல்
துபாய் அரசு குறுகிய நேரத்தில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, “வான்பாதுகாப்பு அமைப்புகள் வரும் ஏவுகணையை வெற்றிகரமாக இடைநீக்கியுள்ளது.
♦️ התקפת כטב"ם על מגדל רב הקומות בעיר דובאי pic.twitter.com/swNhyNGk4z
— Asslan Khalil (@KhalilAsslan) March 7, 2026
ஆனால் விழுந்த இடிபாடுகள் மரினாவில் உள்ள கட்டிடத்தின் வெளிப்புறத்திற்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளது.
துபாய் அரசின் அதிகாரப்பூர்வ ஊடக கணக்கு X தளத்தில், “வெற்றிகரமான இடைநீக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகள் மரினா பகுதியில் உள்ள ஒரு கோபுரத்தின் முன்புறத்தில் சிறிய சம்பவத்தை ஏற்படுத்தியது. நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
யாரும் காயமடைந்தவர்கள் இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர் பலி
இதேவேளை,துபாயில் பர்ஷா பகுதியில் வான்வழித் தாக்குதலில் இருந்து ஏற்பட்ட இடிபாடுகள் அவரது வாகனத்தின் மீது விழுந்ததில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரபு நாடுகள் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
Authorities confirm that debris from an aerial interception fell onto a vehicle in the Al Barsha area, resulting in the death of a Pakistani driver.
— Dubai Media Office (@DXBMediaOffice) March 7, 2026
எனினும்,ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முயற்சிக்கு தயாராக இருந்த நிலையில், ஈரானின் திறன்களை தவறாக புரிந்துகொண்ட ட்ரம்பின் நடவடிக்கையால் அந்த முயற்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.