விஜய்யின் 150 ஆசன வெற்றியை தடுத்த மர்மம் அம்பலம்
விஜயின் தவெக முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனாலும், 234 தொகுதிகளில், 118 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால், தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுடன், தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு தருவார்கள் எனும் கேள்வி எழுந்துள்ளது.
எனினும், 75 வருட அரசியலை தவெக தலைவரின் வருகை மாற்றம் காண வைத்துள்ளது.
இந்தநிலையில், எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல், சினிமாவிலிருந்து வந்த விஜய்க்கு பலதரப்பட்ட தடைகள் இல்லையென்றால் 150ற்கும் மேற்பட்ட ஆசனங்களை வென்றிருப்பார் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எல்லா தொகுதிகளிலும் பிரசாரம் செய்திருந்தால் அவர் நிச்சயம் 150 ஆசனங்களை பெற்றிருப்பார் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam