தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்துகள்: சீமான்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலன், உயர்வுக்காக தொடர்ச்சியாக களப்பணியாற்றுவோம்.
வாழ்த்துகள்
மண், மக்களுக்கான ஆக்கபூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் செயலாற்றுவோம் என சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

எதிர்வரும் மே 7ஆம் திகதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 35 லட்சம் வாக்குகளுடன் 8.19% பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலில் 1,972,537 வாக்குகளுடன் 4% பெற்று முதல்முறையாக வாக்கு வங்கியில் சரிவை சந்தித்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்