கனடாவில் உயிரிழந்த தமிழ் தம்பதி: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில்(Canada) இடம்பெற்ற விபத்தொன்றில் இந்தியாவின் தமிழ்நாட்டை(India - Tamilnadu) சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கனேடிய பொலிஸார் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய நபர், இந்தியாவை சேர்ந்தவர் எனவும், ககன்தீப் சிங் (21) என்ற பெயருடைய இவர் சர்வதேச மாணவராக கனடாவுக்கு வருகை தந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் தகவல்
சம்பவம் தொடர்பில் கனேடிய பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர், வான் ஒன்றில் தப்பியோட, அவரது வான் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.
குறித்த தம்பதியினர், தனது மகன் மற்றும் அவரது குடும்பத்தினரை பார்ப்பதற்காக கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட நபரும் ஒரு இந்தியாவை சேர்ந்தவர். ககன்தீப் சிங் (21) என்ற பெயருடைய இவர் சர்வதேச மாணவராக கனடாவுக்கு வருகை தந்துள்ளார்." என கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri