வவுனியாவில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் சிறீரெலாே கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களின் 38வது நினைவேந்தல் இன்று (06) மாலை 6 மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறீரெலாே) தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி செலுத்தல்
இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் அவரே ஏற்றிவைத்திருந்தார்.
அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித் அவர்களும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலியை செலுத்தியிருந்தார்.
தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் சந்தரகுமார் கண்ணா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர், பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |