தெற்கு காசாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள இஸ்ரேலின் அறிவிப்பு: அச்சம் வெளியிடும் சர்வதேசம்
தெற்கு காசாவில் ரஃபா(Rafah) நகரத்தை விட்டு பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து காசாவில் உள்ள ஐ.நா.(UN) அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலின் விளைவு மிக மோசமானதாக மாறும் எனவும் ஐ.நா. அமைப்புக்கள் இஸ்ரேல்(Israel) இராணுவத்தை எச்சரித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் உத்தரவை அடுத்து ரஃபா நகர மக்கள் போக்குவரத்துக்காக காத்திருப்பதாகவும் பெரும்பாலானோர் தங்களது உடமைகளுடன் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1.4 மில்லியன் மக்கள்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலினால் தற்போதுவரை இடம்பெயர்ந்த 1.4 மில்லியன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசா நகரத்தின்(ரஃபா) மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தின் மத்தியில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை ரஃபாவை விட்டு வெளியேறுகின்றனர்.
கிழக்கு ரஃபாவில் உள்ள சுமார் 100,000 மக்கள் கடற்கரையில் உள்ள "விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதிக்கு" வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள ஹமாஸ் அதிகாரி சமி அபு ஸுஹ்ரி(Sami Abu Zuhri ), ''இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்குதல் "அபாயகரத்தின் அறிகுறியாகும்.
அது இஸ்ரேலுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.
GAZANS are evacuating Rafah. How do we know Hamas isn’t evacuating with them? I hope the IDF is watching for the hostages. I’m sure they have a plan but this all has me a nervous wreck. #BringThemHome pic.twitter.com/MYjjwenzYL
— Gator Nana (@GatorNanaJag) May 6, 2024
எனினும் இஸ்ரேல் தரப்பு, ''காசாவில் எங்களின் நியாயமான போர் சரியான இலக்குகளுடன் தொடர்கிறது என்றும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் ஹமாஸின் தோல்வியே எங்கள் இலக்கு என்றும் கருத்து வெளியிட்டுள்ளன.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |