அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து
அமெரிக்காவில்(United States) உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது.
இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரகசிய சேவை செய்தி
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாரதியை மீட்க முயன்ற வேளை அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
இரகசிய சேவை. கொலம்பியா மாவட்டத்தின் பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனமொன்று மோதி விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
