ஐ.நாவில் ஈழத்தமிழர்களுக்கு காத்திருக்கும் முடிவு
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் ஐ.நா மன்றத்தினால் தீர்வு வழங்க முடியாது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (thepakaran) தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த சீனா தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், மேற்குலக நாடுகளின் எதிரியான ஈரான் தற்போது இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
முக்கிய கேந்திர மையமாக உள்ள இலங்கை ஒற்றை பொருளாதார உலகத்தில் இரட்டை பொருளாதார மையங்களாக தொழிற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் சிங்கள இராஜதந்திரிகள் சீனா இலங்கைக்குள் நுழைய வேண்டும் என்பதில் ராஜதந்திரத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இலங்கைக்குள் சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளை அனுமதிக்கின்றனர்.
இருப்பினும், ஈழத்தமிழர்களின் பிரச்சினை தீரும் வரையில் இலங்கையின் நட்பு நாடாக சீனா இருக்கும் என்றும்,ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் ஐ.நா மன்றத்தினால் தீர்வு கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சக்தி வாய்ந்த ஒரு வள்ளரசு நாடு ஈழத்தமிழர்களின் பிரச்சினையை கையில் எடுத்தால் மாத்திரம் தீர்வினை பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
