ஐ.நா சபைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை
அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் ஆணையாளருக்கு , வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனழிப்பு மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும், இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரித்தும், செம்மணி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனித புதைகுழிகள் விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன விசாரணை ஆணையத்தை நியமித்திட கோரியும் குறித்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணியிலும்ம் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் இந்தபோராட்டத்தின் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை வெளியிடுகின்றோம் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும்.
தாயகத்தில் அதிகளவான சிறுவர், குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் 350 க்கு மேற்பட்டவர்கள் சர்வதேச நீதி கோரி போராடி நீதி கிடைக்காமலே மன உளைச்சலில் இறந்துள்ளனர்.

மன்னார் காற்றாலை போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி! பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்






