மன்னார் காற்றாலை போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி!
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மன்னார் மாவட்டத்தை சேராத சில இளைஞர்கள் உள்ளடங்களாக ஒரு குழு ஒன்றிணைந்து 'காற்றாலை மன்னார் மாவட்டத்திற்கு வேண்டும்' என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம்(2) காலை இடம்பெற்றுள்ளது.
காற்றாலைக்கு எதிரான போராட்டம்
போராட்டத்தை தொடர்ந்து காற்றாலை தொடர்பில் மனு ஒன்றும் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர்.

இந்த பின்னணியில் குறித்த போராட்டகாரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த குழுவிடம் கேள்வி எழுப்பிய நிலையில் சிலர் தப்பி சென்றுள்ளனர்.
ஒரு சில இளைஞர்கள் தடுக்கப்பட்டு அவர்களுடன் போராட்டம் தொடர்பில் வினவப்பட்ட நிலையில் கூட்டம் ஒன்று என்று கூறி தங்களை மல்லாவியில் இருந்து அழைத்து வந்ததாகவும் பணம்,உணவு மற்றும் ஏனைய செலவுகள் தாங்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்து அழைத்து வந்து போராட்டத்தில் இறக்கி விட்டுவிட்டு தங்களை அழைத்து வந்தவர்கள் ஓடி சென்று விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவதாகவும் தாங்களாகவே கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்களிடம் உதவி செய்வதாக கூறி கோரிக்கை கடிதங்களை பெற்று அவற்றை காற்றாலைக்கு ஆதரவு கடிதங்களை போல் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் உள்ளூர் இளைஞர் கழகங்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam