அங்கீகரிக்கபடாத நாடுகளின் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி இறுதியாட்டத்தில் தமிழீழ மகளிர் அணி
அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ண, இறுதியாட்டத்திற்கு தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி தெரிவாகியுள்ளது.
குறித்த போட்டியானது இன்று (08.06.2024) ஐரோப்பாவின் கலாசார தலைநகரான நோர்வே போடோவில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் தமிழீழ அணியை எதிர்த்து சப்மி நாட்டு அணி மோதவுள்ளது.
CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி, நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருந்துள்ளது.
இளம் தலைமுறை
இந்நிலையில் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழீழப் பெண் போராளிகளின் மகளிர் அணிக்கு கி்டைத்துள்ளது.
குறித்த அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள் கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற திறமையான தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் தமிழீழப் பெண் போராளிகளின் வியக்கத்தக்க சாதனைகளை தமிழீழ மண் கண்டுள்ளது. அந்த விழுமியங்களைக் காவியபடி உலகத் தமிழீழ பெண்கள் சாதனைகள் வரலாறு படைக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
