அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் தென்னாசியாவின் இஸ்ரேலாக தமிழீழம்: விமல் சுட்டிக்காட்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அமெரிக்கா(US) கோரியப்படி கையளித்திருந்தால், இலங்கையில் தமிழீழம் உருவாகியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(22.05.2024) உரையாற்றிய அவர், “இலங்கைப் படையினரால் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாமல் போயிருந்தால், தென்னாசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்கும்
இதன் காரணமாக இன்று இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காசா பிரதேசத்தை போன்று சிங்களவர்கள் வாழும் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
விடுதலைப் புலிகளின் தலைவர்
2009ல் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கையளிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இதற்காக அமெரிக்கா கப்பலையும் அனுப்பியது.
மேலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறு கோரியிருந்தன.
எனினும் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |