புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...!

Sri Lanka Tamil diaspora K.V.Thavarasha
By Independent Writer Jun 04, 2024 12:52 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: K.V Thavarasha

வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டின் தமிழ் மக்களின் அரசியலில் தலையிடக்கூடாது என்கின்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

அடிப்படை முகாந்திர மற்ற இக்கருத்தை அவர் என்ன காரணத்துக்காக முன்வைத்தார் என்பதோ அல்லது யாரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான ஒரு கருத்தை பொதுவெளியில் சொன்னார் என்பதோ ஊகிக்க முடியாத ஒரு அம்சம் கிடையாது.

அலிசப்ரி வெளிநாட்டு அமைச்சர் என்பதற்காக இதை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விடவும் முடியாது. 

70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்: தொடரும் குற்றச்சாட்டு

70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்: தொடரும் குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழர்கள்

ஒரு இனத்தின் மீது பொறுப்பற்ற விதத்திலான ஒரு கருத்தை குற்றச்சாட்டாகவும் எச்சரிக்கை போன்ற தொனியில் முன்வைப்பதையும் தமிழர் தேசம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லாது என்பதை அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளுக்கான இலங்கையின் குரலாகவே வெளிநாட்டு அமைச்சர்கள் எப்போதும் திகழ்வர். 

அலி சப்ரி கற்றறிந்த மனிதர் ஆயினும் அவர் ஏன் இவ்வாறு பொறுப்பற்ற கருத்தை பொது வழியில் முன்வைத்தார் என்பதுதான் கேள்விக்குறியது. 

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

உலகில் உள்ள சகல நாடுகளிலும் அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்கள்தான் அந்நாட்டின் அரசியல் பொருளாதாரம் மற்றும் அடிப்படை விடயங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு சக்தியாக இருப்பர் என்பது ஒன்றும் புதிய விடயம் கிடையாது. 

இன்று அனைவருடைய கண்களும் பாலஸ்தீன ரஃபாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு எதிராக குவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையை நாம் அனைவரும் அறிவோம்.

அத்துடன் அங்கு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயத்தை உலகறியச் செய்ததில் பாலஸ்தீனத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு மிகப் பெரியதும் அர்ப்பணிப்புக்குரியதுமாகும்.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

மேலும், யாராலும் கேள்விக்குற்படுத்த முடியாத வீரியமிக்க சக்தியாக அவர்களின் குரல் எழுப்பப்பட்டு வந்தமையையும் உலகம் மறந்து விட முடியாது. 

பாலஸ்தீனத்தின் உள்நாட்டு விவகாரம்

வெளிநாட்டு அமைச்சர் இந்த விடயத்தை எவ்வாறு அனுகுவார் என்பது குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அதாவது பாலஸ்தீனத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்ரேல் தலையிடுவதை பாலஸ்தீனிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் கண்டும் காணாததுமாக சகித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கின்றாரா?

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறலை ஏற்றுக்கொள்ள தயார் இல்லாத அவர் அங்கிருந்து புலம்பெயர்ந்த மக்களை தமது தேசத்தின் இருப்புக்கான அத்தனை முயற்சிகளையும் மனமார ஏற்றுக்கொள்கின்ற அவர் எப்படி ஈழத் தமிழர்கள் விடயத்தில் இவ்வளவு மெத்தனமாக நடந்து கொள்வார்.

அது எந்த வகையில் நியாயமானது, தனக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேசிய பட்டியல் ஊடாக தந்து பலமிக்க பெறுமதியான அமைச்சையும் தந்தமைக்காக சிங்களத்தை திருப்தி படுத்த அவர் வேறு வேலைகளை செய்து கொள்ளட்டும்.

அதற்காக தமிழர் உரிமைகளின் மீதும் தமிழர் இருப்பின் மீதும் தமிழர் அபிலாசைகள் மீதும் தமிழர் கனவுகள் மீதும் கை வைக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து மரணத்தருவாயில் தொங்கிக் கொண்டிருந்த பொழுது புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் பொருளாதார ஒத்துழைப்பும் இந்நாட்டின் அனைத்து சிங்கள தலைவர்கள் உட்பட அனைவருக்கும் தேவைப்பட்டது.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

எனினும், தமிழர் இருப்பு குறித்தும் தமிழரின் சுதந்திரமான நடமாட்டம் குறித்தும் தமிழரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்தும் கவலைப்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்ளக்கூடாது அல்லது அவர்களது விவகாரங்களில் இவர்கள் ஆர்வத்தோடு செயல்படக்கூடாது.

அவற்றை கண்டுகொள்ளாமல் கணக்கெடுக்காமல் புறந்தள்ள வேண்டும் என்று வேண்டுவது எந்த வகையில் நியாயமானது யாரால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்.

இன பாகுபாடு

இந்நாட்டில் இருந்தவர்கள் ஏன் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்ற கேள்விக்கு பதில் மறைமுகமானது கிடையாது. அது மிக வெளிப்படையானது.

இன பாகுபாட்டின் மீதான கறை படிந்த ஆயுதக்கரங்கள் அவர்களை இந்நாட்டை விட்டு துரத்தி அடித்தன.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

அதற்காக தங்கள் மண்மீது பற்றற்றவர்களாக அக்கறையற்றவர்களாக பொறுப்பில்லாதவர்களாக சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்.

அவர்களின் மூச்சுக்காற்று இந்த மண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை அலி சப்ரி விளங்கிக் கொள்ள வேண்டும்.

எங்கள் மக்களின் அரசியல் உரிமைக்காக எங்கள் மக்களின் இருப்புக்காக எங்கள் மக்களின் சுதந்திரத்துக்காக புலம்பெயர் தமிழர்களின் குரல் ஆண்டாண்டு காலமாக ஒழித்துக் கொண்டிருந்ததை போல் இனிவரும் காலங்களிலும் மிக அழுத்தமாக ஒலிக்கும் அதை எந்த ஒரு சக்தியாலும் அவ்வளவு எளிதில் தடுத்து விட முடியாது என்பதை இவர் போன்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கோ அல்லது கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கோ தயார் இல்லாத இவர் போன்ற நபர்கள் தமிழர் இருப்பு சார்ந்தும் தமிழர் உரிமை சார்ந்தும் புலம்பெயர் தமிழர்களின் ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்த எவ்விதமான பொருத்தமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளத் தலைப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

ஐ .பி. சி தமிழ் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் மீது அண்மையில் ஒரு அரசியல்வாதி காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார்.

புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது என்பதை மையப்படுத்தியதாகவே அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

இங்கு தத்தமது நிதி தேவைகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அனைவருக்கும் அவசியமாகின்றது.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

எனினும், அவர்கள் வாய்மூடி மௌனிகளாக உணர்ச்சியற்றவர்களாக தங்களது தேசங்களில் வாழ வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அப்போதுதான் இவர்கள் இந்த இனத்துக்குச் செய்யும் துரோகத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அடையாளப்படுத்த மாட்டார்கள் அல்லது அதைப் பேசுபொருளாக்க மாட்டார்கள் என்று இவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்து அரசியலில் தாக்கம் 

புலம்பெயர் தமிழர்கள் புலத்தில் வாழ்கின்ற மக்களின் மீது கொண்டிருக்கின்ற உண்மையான அக்கறையின் வெளிப்பாடாகவே அவர்களின் உரிமைகளுக்கான அரசியல் செயற்பாட்டுக்கான சுதந்திர இருப்புக்கான குரல் என்பதை யாரும் மறந்து விடவோ மறுதலித்து விடுவோ முடியாது.

ஒரு சில சுயநலமிக்க செயல்பாட்டாளர்கள் இருக்க முடியும் அது தவிர்க்கவும் முடியாது.

அது உலக வழக்கில் இயல்பானது, இந்த விதிவிலக்கை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்த தேசியத்தின் குரலாக எப்போதும் புலம்பெயர் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை யாராலும் அசைக்க முடியாது.

புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...! | Tamil Diaspora Sri Lanka

விருப்பம் இல்லாவிட்டாலும் அக்குரலை அனைவரும் செவிமடுத்துத் தான் ஆக வேண்டும்.

அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், எப்போதும் ஒரு ஆக்கபூர்வமான அழுத்தமிக்க சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் ஈழத்து அரசியலில் தாக்கம் செலுத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு எதிர்கால செயற்பாடுகளை இத்தகைய பொறுப்பற்ற அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 

இல்லாவிட்டால் மக்கள் அவர்களுக்கு என்ன செய்வார்கள் என்பதை விரைவில் அவர்கள் நடைமுறையில் காண்பார்கள். 

புலம்பெயர் தமிழர்களின் உடல்கள் மாத்திரமே உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதைவிடுத்து, அவர்களது உணர்வுகள் உயிர் மூச்சாக தம் தாய் மண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

தமிழ் மக்களை குழப்பும் செயற்பாடு: சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்

தமிழ் மக்களை குழப்பும் செயற்பாடு: சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்

பொதுமக்கள் அமைப்புக்களின் கூட்டிணைவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் கட்சிகளுடனான சந்திப்புக்கள்

பொதுமக்கள் அமைப்புக்களின் கூட்டிணைவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் கட்சிகளுடனான சந்திப்புக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 04 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US