தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த இதுவே காரணம்: சஜித்திடம் சுரேஷ் எடுத்துரைப்பு

Sajith Premadasa Suresh Premachandran Sri Lanka Presidential Election 2024
By S P Thas Jun 12, 2024 11:26 PM GMT
Report

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், இதனால் தமிழ்ப் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும்,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினரை நேற்று (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு : சஜித்திடம் விக்கி சுட்டிக்காட்டு

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு : சஜித்திடம் விக்கி சுட்டிக்காட்டு

ஜனாதிபதித் தேர்தல்

சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஐக்கிய மக்கள் சக்திக்கும் எமது கட்சியினருக்கும் இடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான ஒரு பேச்சு நடைபெற்றிருக்கின்றது. இதன்போது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை விலாவாரியாக அவருக்கு நாங்கள் விளங்கப்படுத்தியிருக்கின்றோம்.

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த இதுவே காரணம்: சஜித்திடம் சுரேஷ் எடுத்துரைப்பு | Tamil Common Candidate Presidential Election

நாங்கள் ஏன் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டி ஏற்பட்டது என்பதையும், அது எவ்வாறு எங்கள் மேல் திணிக்கப்பட்டது என்பதையும் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

அது என்னவென்று சொன்னால், சிங்கள ஜனாதிபதிகள் மேல் எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும், நாங்கள் ஏமாற்றப்பட்டதும் அது மாத்திரமல்லாமல் குறைந்தபட்சம் அரசியல் சாசனத்தில் உள்ளவற்றைக் கூட நிறைவேற்றாமல் போனதும் வெறுமனே தொடர்ந்தும் நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று பொய்களைப் பேசிக் கொண்டிருப்பதும்தான் காரணமாகும்.

இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்ற விடயங்களைத் தெளிவாக அவரிடம் சொல்லியுள்ளோம்.

ஆகவேதான் இப்போது நாங்கள் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நியமிக்கின்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

இதற்குச் சிவில் சமூகங்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஆதரவை வழங்கித் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துகின்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன என்பதையும் அவரிடம் கூறியுள்ளோம்."என்றார். 

கனடாவில் வேகமாக பரவும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் வேகமாக பரவும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த 5 புதிய உறுப்பு நாடுகள்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த 5 புதிய உறுப்பு நாடுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US