கனடாவில் வேகமாக பரவும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனேடிய மாகாணமொன்றில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் ஒன்று பரவிவருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கனடாவின் ரொரன்றோ மாகாணத்தில், இன்வாசிவே மெனிங்கோகாக்கள் டிசீஸ் (IMD) என்னும் நோய் அதிகரித்து வருவாதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டுக்குப்பின் வழக்கமாக காணப்படும் தொற்று எண்ணிக்கையைவிட தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாக்டீரியாவால் பரவும் நோய்த்தொற்று
இது ஒரு பாக்டீரியாவால் பரவும் நோய்த்தொற்று எனவும், எச்சில் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமும் இந்நோய் பரவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூளையில் மீதுள்ள மெல்லிய உறை மற்றும் தண்டுவடம் வரையும், இரத்தக்குழாய்களுக்குள்ளும் இந்த தொற்று பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தாக்கம் வேகமாக பரவி, அது மரணத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் மற்றும் தடுப்பூசி பெறாத பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினரை இந்த நோய் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
