முட்டாள்தனமாகப் பேசினால் விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் : எச்சரிக்கும் பிரதி அமைச்சர்
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் தொடர்ந்து முட்டாள்தனமாகப் பேசினால், விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க எச்சரித்துள்ளார்.
விமல் வீரவங்சவை வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதி அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
ஆதாரங்களுடன் விசாரணை
விமல் வீரவன்ச, கம்மன்பில மற்றும் எதிர்க்கட்சிக் குழு, தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கங்களைப் போலவே இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் இனி முட்டாள்தனமாகப் பேச முடியாது.
அவர்கள் முட்டாள்தனமாகப் பேசினால், அவர்களின் அறிக்கைகள் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதுபோன்ற முட்டாள்தனமாகப் பேசும் அனைத்து அரசியல்வாதிகளையும் ஆதாரங்களுடன் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
