இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானம்: பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு
இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் விமானி மீண்டும் சென்னை வரை இயக்கியதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்புக்கு 158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 287பறவை மோதி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இதனையடுத்து விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பொறியாளர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரங்களில் பறவையின் சடலமொன்று சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்து.
இது தொடர்பிலான முதற்கட்ட ஆய்வுக்குப் பின்னர் விமானத்தில் பாதிப்பு இல்லை என இலங்கை விமான நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
இதனையடுத்து, அதே விமானம் அதிகாலை 3:20 மணிக்கு கொழும்பிலிருந்து 147 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இருப்பினும், ஏர் இந்தியா மற்றும் சென்னை விமான நிலைய பொறியாளர்கள் குழு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது விமானத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதினை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அந்த விமானத்தின் செயல்பாட்டை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு பதிலளிக்கும் விதமாக, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
