முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு
முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது, ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகள் மீளாய்வு
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறை, உள்விவகாரத்துறை மற்றும் உள்ளூராட்சித் துறை ஆகியவற்றிற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 60,430.04 மில்லியன் மூலதனச் செலவினம் மற்றும் ரூ. 706,226.83 மில்லியன் தொடர் செலவினம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள், அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

பிராந்திய சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடையும் வகையில், பிராந்திய நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக உருமாற்றுவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
YOU MAY LIKE THIS VIDEO
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri