நுவரெலியாவில் நிர்மாணிக்கவிருந்த இந்திய முன்னணி ஹோட்டல்: ஜனாதிபதி விளக்கம்
இந்தியாவின் தாஜ் ஹோட்டலின் (India Taj hotel) கிளையினை நுவரெலியாவில் நிர்மாணிக்க வழங்கியிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் (Nuwara Eliya) நேற்று (19.04.2024) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், " நுவரெலியாவில் தாஜ் ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தால் மேலும் இரண்டு ஹோட்டல்கள் அந்தப் பகுதியில் திறக்கப்பட்டிருக்கும்.
இந்திய நிறுவனம்
இந்தியாவில் இருந்து இது போன்ற ஒரு பெரிய நிறுவனம் புதிய திட்டங்களோடு முன்வரும்போது எதிர்ப்புகள் வந்தால் அந்த நிறுவனம் தமது திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும்.
நுவரெலியாவில் உள்ள அஞ்சல் நிலையத்தை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர்?
25 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய பேர் அஞ்சலகத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும்.
மக்கள் எதிர்ப்பு
காலியில் (Galle) உள்ள பொதுமக்கள் நகரத்தில் அதிக ஹோட்டல்கள் காணப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால், நுவரெலியாவில் உள்ளவர்கள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றனர்.
எனவே, மக்களின் எதிர்ப்பு காரணமாக நுவரெலியாவில் தாஜ் ஹோட்டல் அமைக்கப்பட போவதில்லை.
மேலும், குறித்த பழைய அஞ்சலகத்தை தகர்க்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாது" எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
