டி20 உலகக் கிண்ணம் - அயர்லாந்து அணியின் பவுல் ஸ்டிர்லிங் விலகல்!
ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் பவுல் ஸ்டிர்லிங் (Paul Stirling), காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இது அயர்லாந்து அணிக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஸ்டிர்லிங்கின் தசைநார் (Ligament) சேதமடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் பலம்
இதனால் அவர் சிகிச்சைக்காக நாடு திரும்பவுள்ளார். ஸ்டிர்லிங்கிற்குப் பதிலாக சாம் டாப்பிங் (Sam Topping) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம் டாப்பிங் தற்போது சென்னை நகரில் இருப்பதால், அவர் உடனடியாக கொழும்பில் உள்ள அணியுடன் இணைவார்.
அணியின் மற்றொரு வீரரான பென் கலிட்ஸ் (Ben Calitz) கையில் காயமடைந்துள்ள நிலையில், சாம் டாப்பிங்கின் வருகை அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என அயர்லாந்து உயர் செயல்திறன் பணிப்பாளர் கிரேம் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri